« Home | தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை தமிழ் முஸ்லிம்க... »

மும்பையை மறு குஜராத்தாக்குவதற்கு திட்டமா?
மும்பையை குஜராத்தாக்குவதற்கு ஃபாசிஸ்ட்டுகளின் திட்டமா?


"வன்முறை என்பது மதங்களின் கோட்பாடோ கொள்கையோ அல்ல.....எந்த ஒரு மதமும் வன்முறையை ஆதரிப்பதில்லை மாறாக வன்முறை என்பது தனிப்பட்ட நபர்களின்
சித்தாந்தங்களினால் உண்டான விருப்பு வெறுப்புக்களின் கோர வெளிப்பாடே..... எந்த ஒரு அரசியல் காரணம் கொண்டும் அப்பாவி பொதுமக்கள் மீது ஏவிவிடப்படும் வன்முறைகளையும் கொலைத்தாக்குதல்களையும் நியாயப்படுத்துதல் ஆகாது."


நேற்று (11-07-2006) மாலை 6 மணியளவில் மும்பையில் பல்வேறு இடங்களிள் அப்பாவி பொதுமக்கள் மீது ஆன்மையற்ற மனநோய் பிடித்தவர்களால் நடத்தப்பட்ட கோழைத்தனமான கொடூர தாக்குதல்களினால் இதுவரை 190 க்கும் அதிகமானோர் அக்கிரமாமாக கொல்லப்பட்டும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமாகியும் உள்ளார்கள்.

யுத்தமல்லாத சமாதான நேரத்தில் அமைதியான ஒரு நகரில் அப்பாவிகள் மற்றும் சாதாரண ஆயுதம் தறிக்காத பொது மக்கள் மீது காட்டுமிரண்டித்தனமான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலியானவர்கள் அனைவரும் தனிப்பட்ட ஒரு இனத்தையோ, மதத்தையோ சார்ந்தவர்கள் அல்ல மாறாக இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள் என அனைத்து தரப்பு அப்பாவி பொதுமக்களும் இதில் அடங்குவர். இது மாபெரும் குற்றமாகும் இதைச்செய்தவர்கள் யாராக இருந்தாலும் பார பட்சமின்றி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அதே சமயத்தில் இவர்கள் எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இக்குற்றவாளிகள் சார்ந்திருக்கும் சமுதாயம் எவ்வகையிலும் இவர்களின் மனிதநேயமற்ற செயல்களுக்கு காரணமாகாது. இம்மணநோய் பிடித்த சித்தாந்தவாதிகள் மத பேதமின்றி வன்மையாக கன்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அப்பாவி பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலை எப்போதும் போல் "லஷ்கர்-இ-தொய்யிபா", "ஜெயஸ்-இ-முகம்மத்" போன்ற போர்வை கொண்டு மூடி நீர்த்துப்போகச் செய்திடாமல் இந்த கோழைத்தனமான மிருகவெறி தாக்குதலை இந்திய அரசு, நாட்டின் இறையான்மை மீது தொடுக்கப்பட்ட யுத்தமாக எண்ணி தனது அரசின் அனைத்து சக்திகளையும் திரட்டி தீவிர விசாரணை மேற்கொன்டு இம்முறை இதில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களுக்கு துணை நின்றவர்களையும் நாட்டிற்கு அடையாளம் காட்டி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். முக்கியமாக இந்த கோரச்சம்பவத்திற்கு மூலகாரணமானவர்களை அடையாளப்படுத்திட வேண்டும்.

இது போன்ற தொடர் குண்டுவெடிப்புகளின் மூலம் அதிகமான
உயிர்சேதத்தையும் பொருளாதார நஷ்ட்டங்களையும் ஏற்படுத்த வேண்டுமானால் மிக நுணுக்கமான திட்டமிடுதலும் அதைச்செயல் படுத்துவதற்காக வேண்டி மதங்களின் பெயரில் தனிப்பட்ட சிலரின் சுய சித்தாந்தங்களால் மூலைச்சலவை செய்யபட்ட ஆக்ரோசமான இளைஞர்களும், அதையும் விட அவசியத்தேவையாக உள்ளுர் தொடர்புகளும் அரசியல் பின்புலமும் இருந்தாக வேண்டும். இதுபோன்ற திறமைகள் உலகிலேயே சில இயக்கங்களிடம் தான் உள்ளன அத்தகைய இயக்கங்களில் இந்தியாவில் இயங்கிவரும்
ஃபாசிச இயக்கங்கலான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா,
பஜ்ரங்தள் போன்ற இயக்கங்களும் உள்ளடங்கும்.


கடந்த 1993 ம் ஆன்டு சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொடூர கொலைவெறி தாக்குதலுக்கு பின் நடந்த இது போன்ற தொடர் குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அப்போது கூட இவர்களாளல் தாக்கப்பட்டவை இதுபோன்ற அப்பாவி பொதுமக்கள் பயணம் செய்யும் புகைவண்டிகள் அல்ல. மாறாக அரசின் அதிகார மையங்களும் வாத்தக மையங்களும் தான்.

அப்போது இதுபோன்றே தொடர் குண்டுவெடிப்புக்கள் சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்தி நடத்தப்பட்டன. அதிகமான பொருளிழப்பும் உயிரிழப்பும் ஏற்படுத்தப்பட்டன. இதைச்செயல் படுத்தியவர்கள் அன்றைய பம்பாயில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் பம்பாய் நகரின் ஒவ்வொரு அசைவும் இவர்களின் சுட்டுவிரல் கொன்டு தீர்மானிக்கப்பட்டன. தாவுத் இபுறாஹிம், டைகர் மேமன், அபு சலீம் போன்றோர் அன்றைய அரசியல்வாதிகளின் பின்புலத்தோடு அண்டர்கிரவுன்ட் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள் மற்றும் இவர்களுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகளை நமது எதிரி நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ வழங்கியது மற்றும் அதைச்செயல்படுத்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை தங்களிடம் கொண்டிருந்தார்கள். அதன் விளைவே பம்பாய் தொடர் குண்டுவெடிப்புக்களும் அப்பாவி பொதுமக்கள் சாவுகளும். அதன் பின்னர் இவர்கள் இந்திய அரசால் களையெடுக்கப்பட்டார்கள்.

சரிந்து வரும் தங்களின் ஆதரவை நிலை நிறுத்தவும், அரசியல், பொருளாதார ரீதியல் தங்கள் பலத்தை பெருக்கவும், உற்சாகமிழக்கும் தங்கள் தொண்டர்களை உற்சாக மூட்டவும் ஒற்றுமையாக இணைந்து வாழும் சமூகங்களிடையே வெறுப்பை உருவாக்கி இரத்த ஆறுகளை ஓடச்செய்து மேற்கூறியவற்றை சாதிப்பதற்காக வேண்டி இதுபோன்ற கோரப்படுகொலைகளை செய்யத் தயங்காதவர்கள் தான் இந்த ஹெட்கோவர், சாவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட ஃபாசிச இயக்கங்கலான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற இயக்கத்தினர்.

இவர்களிடம் மிக நுணுக்கமாக திட்டமிடக்கூடிய பல முன்னால் இரானுவ மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை கொண்ட குழு உள்ளது. இதுபோன்ற காரியங்களை செயல்படுத்துவதற்காக வேண்டி இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டு ஹெட்கேவர், சாவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொன்டர்களும் உள்ளனர்.

ஓவ்வொரு முறை தங்களின் செல்வாக்கு சரியும் போதும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று என்னும்போதும் இதுபோன்ற கொடூரமான கொலைகளை நிகழ்த்தி அதைக்கொன்டு சிறுபான்மையின் மக்கள் மீது கொடூர கொலைவெறித்தாக்குதல்களை நடத்தி தங்களை அரசியல் பொருளாதார ரீதியாக நிலைப்படுத்தி கொள்வார்கள். இந்த ஹெட்கேவர் என்ற தீவரவாதியின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட கோட்சே என்பவனைக் கொண்டு நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை படுகொலை செய்தார்கள் ஹெட்கோவர், சவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்ற இந்த பாசிச சக்திகளின் தலைமையில் இயங்கி வந்த அன்றைய தீவிரவாதக்குழுவினர். தேசப்பிதாவை கொன்றுவிட்டு அதைச்செய்தது முஸ்லிம்கள் என்ற பொய்ச்செய்தியை தங்களிடம் இருந்த ஊடகங்கள் வாயிலாக பரப்பினர். (இதற்காகவே திட்டமிட்டு அன்றைய முக்கிய ஊடகங்களான ரேடியோ நிலையங்களில் இந்த தீவிரவாத சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்டவர்களும் ஆதரவாளர்களும் ஊடுருவச்செய்யபட்டிருந்தனர்) அதன் மூலம் மாபெரும் கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் கொல்லப்பட்டன மேலும் பல்லாயிரக்கனக்கானோர் சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக துரத்தப்பட்டனர்.

இது போன்றே ஒவ்வொரு முறையும் நம் நாட்டில் கலவரங்கள் ஏற்படுத்தி ஆயிரக்கணக்கில் அப்பாவி உயிர்கள் கொல்லப்படும்போதும் அதற்கு முன்காரணியாக ஏதேனும் ஒரு சம்பவம் நடத்தி அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டு அதை சிறுபான்மை சமுதாயத்தின் மீது சுமத்தி அச்சமூகத்தினர் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலைக்குள்ளாக்க பட்டுள்ளார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்ற ஒன்றை நிகழ்த்தி அதில் சில உயிர்களை கொன்று அப்பழியை ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம் சமுதாயத்தின் மீது இட்டு முன்கூட்டியே திட்டமிட்டிருந்தபடி இச்சமூகத்தினர் மீது இந்த ஹெட்கோவர், சவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட கும்பலின் மூலம் கொடூர தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இம்மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்க்ள. இதற்கு தீவிரவாதி ஹெட்கேவரின் சீடர்களான் அன்றைய உள்துறை அமச்சர் அத்வானி, பிரதமர் வாஜபாய் போன்றோரின் ஆசியுடன் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடி நரகாசுரனாக மாறி தனது அரசின் அனைத்து இயந்திரங்களையும் திட்டமிட்டபடி ஈடுபடுத்தி இம்முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அரசு இயந்திரங்களும் இதற்கு துணைபோயின எதிர்ப்பு தெரிவித்த நேர்மையான அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள். மனிதாபிமானமற்ற மனிதப்படுகொலைகளை மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இந்த ஃபாசிச பயங்கரவாதிகள் நடத்தினர். நாட்டின் ஜனாதிபதியால் கூட அவற்றை தடுத்து நிறுத்திட இயலவில்லை. சமூக ஒற்றுமை பற்றியும், மனித உரிமை பற்றியும் பேசிவரும் இந்திய அரசின் முகத்தில் மேலை நாடுகள் காறி உமிழ்ந்தன. உலகையே உலுக்கிய படுகொலைகளும் மாபாதகச்செயல்களும் அரச பயங்கரவாதமும் தேசபக்தி என்ற பெயரிலும் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரிலும் அரங்கேற்றப்பட்டன.

மிக கவனமாக திட்டமிடப்பட்டு குஜராத்தின் முஸ்லிம்
இனத்தை சேர்ந்த கல்விமான்கள், வங்கி முகாமையாளர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பல்கலைக் கழக
மாணவர்கள், பட்டதாரிகள், பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பல வகையான புத்திஜீவிகளை அடையாளப்படுத்தி அழித்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சொந்த மண்ணில் இம்மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இவையனைத்தும் இந்த மதவெறிகொண்ட ஹெட்கோவரின் சீடர்களால் மிக கவனமாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது.


இப்பாசிச கும்பலின் தீவிரவாதச்செயல்கண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் தலைகுனிந்தது. இந்தியாவின் மதச்சார்பின்மை உலக அரங்கில் நகைப்பிற்குறியதாகியது. அப்படிப்பட்ட கொடூரங்கள் குஜராத்தில் அரங்கேற்றப்பட்டன. கற்பினியின் வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்த கருவை எடுத்து நெருப்பில் வீசினார்கள். சொந்த தந்தை, சகோதரன், கணவன், மகனின் கண் முன்னே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு இவர்களின் பெண்மை சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஆண்கள் அணிவகுக்க செய்யப்பட்டு குழந்தைகள் முதியோர் என்ற பாகுபாடின்றி படுகொலை செய்யப்பட்டு வீதியோரங்களிளும் வீடுகளிலும் எரிக்கப்பட்டார்கள். இறந்த மனித சடலங்களுக்குறிய மறியாதை கூட வழங்கப்படாமல் அவை எரிந்த மரத்தின் அடிப்பாகங்கள் போல் குஜராத்தின் வீதியெங்கும் வீசியெறியப்பட்டும் வீடுகளிள் குவிக்கப்பட்டும் கிடந்தன.

குஜராதின் வீதிகளிள் பிடித்து செல்லப்பட்ட நுற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் கத்தியால் குத்தியும், வாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டு டயர் போட்டு வீதிக்குக் குறுக்கே எரித்த கோரச் சம்பவம் இவ்வுலக மக்கள் மத்தியில் என்றும் மனதை விட்டு மாறாத வடுக்களாகப் பதிந்துள்ளது. முஸ்லிம் இனப்பெண்களும், ஆண்களும், குழந்தைகளும், முதியோர்களும் வீதியோரங்களில் படுகொலை செய்து மரங்களைக் குவிப்பது போன்று சடலங்கங்கள் எரிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட சடலங்கள் சுருண்ட வடிவில் எரிக்கப்பட்ட கட்டைகள் போன்று காணப்பட்டது. இவ்வாறு மனிதப் பெறுமதியையும், பண்பாடும் காலத்திற்குக் காலம் அருகிக் கொண்டு சென்றது. இதற்கு முழுநேரப் பங்காளிகளாக வி.எச்.பி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்தீவிரவாதிகளுடன் அன்றைய இந்திய நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ரதயாத்திரைகள் நடத்தி ரத்த ஆறுகளை ஓடவிட்டவருமான அத்வானியும் மற்றும் மோடி அரசாங்கத்தின் காவல்துறையும் இயங்கின.இது வரை இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை மாறாக தங்களின் திட்டப்படி அரசபதவிகளிள் அமர்ந்துள்ளார்கள்.

இவையனைத்தும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. காரணம் சரிந்து வந்த தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்திடவும் தேர்தலில் வென்று ஆட்சியில் அமரவும் தான். அதற்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ரயில் எரிக்கப்பட்டு அப்பழி அப்பாவி முஸ்லிம்கள் மீது இடப்பட்டு அவர்கள் கூட்டம் கூட்டமாக பேரினவாத தீவிரவாத கும்பல்களால் அரசின் ஆசிர்வாதத்தோடு படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கு முந்தைய சம்பவங்களும் உதாரணங்களாக உள்ளன. தாங்கள் செல்வாக்கு குறையும் போதெல்லாம் ரதயாத்திரை நடத்தி ரத்த ஆறு ஓட்டுவது, அப்பாவிகளையும் தலைவர்களையும் கொன்று அப்பழியை சிறுபான்மையினர் மீது இட்டு தேச பக்தி என்ற பெயரில் வெறியாட்டம் ஆடுவது என்று.

ஆக இப்போது மும்பையில் நடந்த சம்பவமும் கூட கோத்ரா சம்பவம் மற்றும் தேசப்பிதா மகாத்மா படுகொலையைப் போன்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக இருக்கலாம். இது மும்பையை மறு குஜராத்தாக மாற்றுவதற்காக முன்னோட்டமாக கூட இருக்கலாம். இதற்கு கடந்த சில நாட்களாக ஃபாசிச தீவிரவாதக்குழுவான சிவசேனாவினர் மும்பையில் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதல் சம்பவங்களே உதாரணம்.


தற்போது இது போன்ற ஒரு திட்டமிட்ட அதிக உயிர் மற்றும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு சிவசேனா, வி.எச்.பி. பஜ்ரங்கள் தவிர்த்து எந்த ஒரு குழுவும் மும்பையில் இயங்கி வருவதாக தெறியவில்லை. 1993 க்கு பிறகு தாவுத் இபுறாஹிம் போன்றோரின் அண்டர்கிரவுன்ட் அரசாங்கங்கள் ஒழிக்கப்பட்டு இப்போது அது போன்ற அண்டாகிரவுன்ட் அரசாங்கங்களை ஃபாசிச தீவிரவாதி சிவசேனா தலைவன் பால்தாக்கரேயின் குழுக்களே நடத்தி வருகின்றன. இவர்களுக்கு பலமான அரசியல் பொருளாதார பலமும் உண்டு. சரிந்து வரும் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக வேண்டியும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி எதிர் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக வேண்டியும் குஜராத்தில் நடத்தியது போல் இந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை காரணமாக கொண்டு தேச பக்தி என்ற பெயரில் மதக்கலவரங்களை மும்பையெங்கும் ஏற்படுத்தி ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் மீது இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு கூட இதைச்செய்திருக்கலாம்.

உடனடியாக இந்திய அரசு எந்த வித பாராபட்சமும் இன்றி அரசியல் அழுத்தங்களுக்கு பணியாது நேர்மையான விசாரணை மேற்கொன்டு குற்றவாளிகளை அவர்கள் யாராக இருந்தாலும் நாட்டிற்கு அடையாளப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அப்படியில்லையெனில் இந்திய நாட்டில் அப்பாவி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

ஒருவேளை இந்த சம்பவத்தில் எதிரி நாட்டவரோ அல்லது அவர்களின் உதவி பெறும் தீவிரவாத குழுக்கலோ ஈடுபட்டிருந்தால் அமெரிக்கா செய்வதுபோல் இந்திய அரசு தனது அனைத்து ராணுவ பலத்தையும் கொண்டு இக்குழுக்களை இயங்கும் இடத்தை கண்டறிந்து அழித்திட வேண்டும். தற்காப்பு நடவடிக்கையாக இதனை மேற்கொன்டு இந்திய பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேன்டிய கடமை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. ஏனெனில் அன்று 1931 ல் இந்து தீவிரவாத கும்பல்களின் சித்தாந்த தலைவர்களிள் ஒருவனான டாக்டர்.மூஞ்சே என்பவன் ஃபாசிஸ்டுகளின் தலைவனான முசோலினியை ஃபாசிஸ்டுகளின் அன்றைய தலைமை பீடமான போலசோவென்சியா விலேயே சந்தித்து உதவி பெற்றுள்ளான் இதுபோன்று அந்நிய ஃபாசிச அரசுகளின் உதவிகளைக் கொண்டே அன்று நமது தேசப்பிதா மகாத்மா படுகொலை செய்யப்பட்டார். ஆமதாபாத் கலவரம் போன்ற பல கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு தங்களை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்திக்கொண்டார்கள் இன்றை இந்திய ஃபாசிச தீவிரவாத குழுக்கலான ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி பஜ்ரங்தள் போன்றோர்.

இது அமைதியாக வாழும் மும்பை மக்களிடையே மத துவேஷத்தை தூண்டி மும்பையை மறு குஜராத் ஆக்குவதற்கான 'கோத்ரா சம்பவம்' போன்ற திட்டமிடுதலாக கூட இந்த தாக்குதல் இருக்கலாம். அப்பாவி பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலை எப்போதும் போல் ''லஷ்கர்-இ-தொய்யிபா'' ''ஜெயஸ்-இ-முகம்மத்'' போன்ற போர்வை கொன்டு மூடி மறைத்திடாமல், இந்த கோழைத்தனமான மிருகவெறி தாக்குதலை இந்திய அரசு தன்மீதும் தன் நாட்டின் இறையான்மை மீதும் தொடுக்கப்பட்ட யுத்தமாக எண்ணி தனது அரசின் அனைத்து சக்திகளையும் திரட்டி தீவிர விசாரனை மேற்கொன்டு இம்முறை இதில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களுக்கு துனைநின்றவர்களையும் நாட்டிற்கு அடையாளம் காட்டி சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். முக்கியமாக இந்த கோரச்சம்பவத்திற்கு மூலகாரணமானவர்களை அடையாளப்படுத்திட வேண்டும். இந்திய அரசால் பொதுவாக எந்த சம்பவம் நடந்தாலும் குற்றம் சாட்டப்படும் அனைத்து அமைப்புக்களும் இந்த படுகொலையை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. ஆக உண்மைக்குற்றவாளிகளை கண்டறிந்து மக்களுக்கு அடையாளப்படுத்தும் பொறுப்பு அரசை சார்ந்துள்ளது. பாரதப்பிரதமர் மதிப்பிற்குறிய மன்மோகன் சிங் அவர்கள் கூறியது போல் உண்மை குற்றவாளிகளை நாட்டிற்கு அடையாளப்படுத்துவார் என்று நம்புவோமாக.

உயிர், உடமைகளை, உறவுகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும்., அனுதாபத்தையும் தெறிவித்து இந்திய நாட்டின் இறையான்மை காக்கவும் எம்மக்கள் என்றும் ஒற்றுமையாக வாழவும் வேன்டி கண்ணீருடன் இறைவனை பிரார்த்தித்தவனாக விடைபெறுகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்
இந்தியப்பிரஜை