« Home | இயக்கங்களின் தற்போதைய கடமைகள் » | இயக்கங்களின் தற்போதைய கடமைகள் » | மும்பையை மறு குஜராத்தாக்குவதற்கு திட்டமா? » | தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை தமிழ் முஸ்லிம்க... »

முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து


பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி, மிக பெரிய சதியிலிருந்து தப்பித்தார் ததஜ-வின் பொதுசெயலாளார் S.Mபாக்கர்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,அன்பின்கினிய சகோதரார்களே! கடந்த 23-7-2006 தமிழகத்தின் காலை நாளிதழ்களில் அனைத்தும் ஒரு செய்தியை மையமாக வைத்து மரண ஓலமிட்டனர்

அதாவது கோவையில் முக்கிய இடங்களை தகர்க்க பயங்கர சதி
கோவையை தகர்க்க சதித்திட்டம்
கோவையில் குண்டு வைக்க சதித்திட்டம்
இது தான் அன்றைய செய்தி....


எல்லோருடைய பார்வையில் பொதுவான சில கேள்விகள் இருந்தாலும் நாம் நமது சிறப்பார்வை (கள ஆய்வல்ல)வுடன், இந்த செய்திகள் அனைத்தையும் திரட்டி வைத்து பிரி;ன்ட் எடுத்து பார்த்த்போது மிகபெரிய சமுதாய தூரோகிகளின் முகம் அந்த செய்தினுள் ஒளிந்திருப்பதை காண முடிந்தது. இதை பார்ப்பதற்க்கு முன்னால் கடந்தகாலத்தில் நடந்த காலசுவடுகளின் சில தகவல்களை தாங்கள் பார்வைக்கு தருகின்றேன்

பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள LIC கட்டிடத்தை குணடு வைத்து தகர்க்க சதி, என்று மிக பெரிய செய்தி ஒன்றை நாளிதழ்களுக்கு தமிழக உளவு துறையின் மூலம் பாரிமாறப்பட்டு அதற்க்கு ஆதாரமாக டிபன் பாக்ஸ் குண்டு என்று ஒன்றை காண்பித்தார்கள். உணவு கொண்டு செல்வதற்காக உள்ள டிபன் பாக்ஸில் வெடிக்குண்டா? என்றார்கள் அதற்க்கும் எனது அருமை இஸ்லாமிய சகோதரன்களை சுட்டிகாட்டினார்கள் அன்றைய உளவு துறையின் உலுத்துப்போன அதிகாரிகள்.

சில வருடங்களுக்கு முன்னால், மௌலவி ஹாமீத் பக்ரி மன்பஈ அவர்களை கைது செய்து உளவு துறை இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது இஸ்லாமிய டிபன்ஸ் போர்ஸ் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழகத்தின் அமைதியை குலைப்தற்க்கும் பொதுமக்களுடைய உயிர்களை எடுத்து மாநிலத்தில் அமைதியின்மையை எற்படுத்த வெடிகுண்டுகளை தயாரித்தல் வினியோகித்தல் என்று பறைசாற்றியது.

(மேற்கண்ட இரண்டு வழக்குகளும் சென்னை புறநகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தான் பதிவு செய்யப்பட்டதுள்ளது என்பது விசேஷசெய்தியாகும்)

அடுத்து தற்போது உள்ளவை...

இதில் அனைத்திலும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. ஒன்று உளவு துறை நுண்ணறிவு பரிவிலுள்ள நுண்கிருமி (வைரஸ்) ரத்னசபாபதி தலையீடு உண்டு (மாசனமுத்துவின் மறைமுக தொடர்பும் - யார் தெரியுமா இந்த மாசனமுத்து கோவைவாசிகளிடம் கேட்டுகொள்ளவும்)

இரண்டாவது ஆச்சாரியமானது என்வென்றால் இதில் கைது செய்யப்பட்டவர்கள் எதாவது ஒருவகையில் ததஜ-வின் தற்போதைய மாநில தலைவர் பிஜெ-யுடன் தொடர்புடையவர்கள்-என்ற அபூர்வ செய்தி நமது கண்களை ஆறத்தழுவியது.

பொதுவாக கோவையை மையமாக நடைபெறக்கூடியவைகளில் முக்கியமாக இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறவதற்க்கு முந்திய தினம் அல்லது அதே தினத்தில் தனது தலைமை தளபதியாக யார் இருக்கின்றாரோ அவரை கோவையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அண்ணன் பிஜெ-யின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயமாகும். இந்த சம்பவத்திற்க்கு முன் பிஜெ-யின் தலைமை தளபதி போர்வாள் S.M பாக்கர் அவர்கள் கோவையில் இருந்துள்ளார்கள். கைது சம்பவத்திற்க்கு பிறகு ஆள் கோவையை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நமது கிடைத்த வலுவான செய்தியாகும்.

தனக்கு அடுத்த இடத்தில் மக்கள் மத்தியில் பேச கூடியவராக இருப்பவரை பிஜெ அவர்கள் இதே முறையில் தான் மாட்டிவிட்டு ஒரேயடியாக (ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு) மட்டம் தட்டுவார் அதற்க்கு முந்தைய பக்ரியின் கைதும், அதற்க்கு முன் கோவை குண்டு வெடிப்பு அன்று பக்ரியை கோட்டைமேட்டில் இருக்குமாறு செய்ததும் (இந்த செய்தியை உறுதி செய்யகொள்ள நினைப்பவர்கள் பக்ரி அவர்கள் 100 நாட்கள் சிறைவாசகத்திற்க்கு பிறகு நெல்லை ஏர்வாடியில் அளித்த உள்அரங்க பேட்டியை காணவும்)

ஆனால் இங்கு அண்ணன் பிஜெ அவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் தளபதி பாக்கர் எப்படியென்றால் தளபதி பாக்கர்-அவர்களின் கோவை சுற்றுபயணத்தில் நுண்கிருமி
ரத்னசபாதியை சந்திப்பு இல்லை ஆனால் தளபதி பாக்கர் அவர்கள் நுண்கிருமி ரத்னசபாதியை கைதுக்கு படலத்திற்க்கு முன் இரகசியமான முக்கிய இடத்தில் தனிமையில் சந்திதுள்ளார், அந்த சந்திப்பில் சில விவரங்களை (லூஸ்டாக் முறையில்) அண்ணனின் பிரதிநிதி என்ற எண்ணத்தில் நுண்கிருமி கொடுத்துவிட்டார் தளபதிக்கு. இதைகேட்ட பாக்கர் ஆடிபோனலும் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து இறுதில் கோவையைவிட்டு இரகசியமாக வெளியேறியும் விட்டார். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே அது இதுதானோ என்று எண்ண தோன்றுகின்றது.



ஐந்து பேரில் பாஷா சகோதர்கள் பிஜெ-யின் ததஜவில் தொடர்புடையவர்கள் என்பது கொசுறு செய்தி....

விஷயம் இது தான்....

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விரைவாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வரும் என்ற நிலையில் உள்ளது. வரும் தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதமாக இந்தாலும் அல்லது அவர்களுக்கு எதிராக இருந்தாலும் பாதிப்பிற்குள்ளவாது சிறைவாசிகள் அல்ல காரணம் 8 ஆண்டுகள் தனது வாழ்க்கையை சிறைகூடத்தில் கழித்தவர்கள் அவர்கள். ஆனால் தீர்ப்பினால் இரண்டு வகையினருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அவர்களில் ஒரு வகை கோவை குண்டு வெடிப்பு மற்றும் கலவத்தில் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் (மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை)கள் இரண்டாவது வகையினர் பிஜெ-யும் அவருடன் உள்ள கூட்டமாகும். எனவே மேற்கண்ட இருவகையினரும் கோவை குண்டு வெடிப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளிப்போட வேண்டும் அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவஉதவிகள் செய்வதும் தடைசெய்யவேண்டும். காரணம் மருத்துவமனையில் இருக்க கூடியவர்களை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்படலாம் இதனால் சிறைவாசிகளில் உண்மைநிலை மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் இதுவெல்லாம் மேற்கண்ட இருவகையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த இருவரின் கூட்டுசதியில் உறுவானது தான் இந்த வெடிக்குண்டு சதி வைபவம். மக்கள் இந்த சமூதய துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஏதோ இவர்களை குற்றப்படுத்தவேண்டும் என்பதற்காக இதை நாம் எழுதவில்லை மறாக காரண காரியத்துடன் நாம் எழுதுகின்றோம்.

இதில் பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து என்ற ரீதியில் ஒரு இடைசெருகல் செய்தி ஒன்று கசியவிடப்பட்டது என்றே போதும் இவர்களும் உளவுத்துறையினருக்குமுள்ள தொடர்பு.

ஹிட் லிஸ்ட்டில் பிஜே பெயர் - குமுதம் ரிப்போர்ட்டர்


காரணம் மனித நீதி பாசறையினரை கடுமையாக விமர்ச்சனம் செய்தவர்களில் ஒருவர் பிஜெ, இப்படி பகிரங்கமாக பேசியவர் தமுமுக-வின் சுனாமி கணக்குகளை சரிபார்க்க பிஜெயால் பரிந்துரை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றுதான் இந்த மனித நீதி பாசறை அத்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் அலுவலகத்தில் பிஜெயின் பிரதிநிதி இரண்டு முறை சென்றுவந்துள்ளார்கள் என்பதனை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அதையும் பெருமையாக தனது சைட்டிலும் உணர்விலும் வெளிட்டார்கள்.

சென்னையில் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஹோட்டல்களில் பலவருடங்களுக்கு முன் தொடர் குண்டுவெடிப்பு நடந்தவுடன் (அதில் ஒரு ஹோட்டல் தற்போது அண்ணனின் கட்டுபாட்டில்), கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், ஜிஹாத் கமிட்டி தடைசெய்யப்பட்டவுடன், அதே போல் அல்-உம்மா தடைசெய்யப்பட்டவுடன், போரளி இமாம் அலி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனஸா அடக்கம் செய்யப்பட்டவுடன், இப்படி எல்லா காலகட்டத்திலும் இஸ்லாமிய சமுதயாத்திற்க்கு எதிராக காவல் துறை நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளபோது மட்டும் 'பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து' என்ற செய்தி மிக பெரிய அளவில் ஊடகத்துறைக்கு உளவுத்துறையின் துரைமார்களால் கொடுக்கப்படுவதின் இரகசியம் தான் என்ன? இந்த செய்தி வெளியிட்வுடன் உடனடியாக தானியங்கி ஆயதம் தாங்கிய
காவலர்களால் புடைசூல அண்ணன் பிஜெ அவர்கள் நடமாடுவது எதனால் விளக்குவார்களா பிஜெ அல்லது பிஜெ-யின் பினாமிகள்?

ஓவ்வொரு முறையும் தமிழகத்தில் காவல்துறையால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் கைது செய்யப்படும்போதும் அவர்களிடம் இருந்து சங்பரிவார தலைவர்களை கொல்ல திட்டம் என்று ஒரு ஹிட் லிஸ்ட்டை கைப்பற்றியுள்ளதாக போலிஸ் தகவல் வெளியிடும் அப்படிப்பட்ட ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டு அண்ணன் பி.ஜே க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.. ஹிந்து தீவிரவாதிகளை கைது செய்யும்போதோ அல்லது ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார நபர்களிடமிருந்தோ கைப்பற்றப்படும் ஹிட் லிஸ்ட்டில் ஒருபோதும் அண்ணன் பி.ஜே பெயர் இருந்ததாக செய்தி வந்ததில்லை ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக கைது
செய்யப்படும்போதும் ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பது ஏன்? ஆண்ணன் பி.ஜே என்ன சங்பரிவார தலைவரா அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் "சர் சங் சலக்குகளில்" ஒருவரா? சற்று சிந்தியுங்கள் மக்களே !! ததஜ வினரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.



இந்தியாவில் பாசிச இந்து இயக்கங்களில் தலைவர்களுக்கு முஸ்லிம்களால் உயிருக்கு ஆபத்து என்ற செய்திக்கு இணையாக உளவுத்துறையினர் ஒரு முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து என்று யாரைத்தெரியுமா சுட்டிக்காட்டுகின்றார்கள்? மரியாதைக்குரிய அண்ணன் பிஜெ அவர்கள் தான் என்பது தற்போதுள்ள ஒரே ஆறுதல் செய்தி.

(குறிப்பு: கோவை சம்பவத்தில் உளவுத்துறையின் நுண்கிருமி ரத்னசபாபதி, பிஜெ-க்கு பாதுகாப்பை பலப்படுத்த நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே)



நடைபெறதாத குற்றங்களை அதாவது மிக பெரிய சதியை முறியடிப்பு, நாசவேலை முறியடிப்பு 'கோவை தப்பியது' 'சென்னை தப்பியது' என்று எப்போதுயெல்லாம் உளவுத்துறை செய்தி வெளியிடுகின்றதோ அப்போதுயெல்லாம் அதற்கு பின்னால் பல 'இன்பார்மர்கள்' உள்ளனர். (இப்படி நடப்பது முஸ்லிம் சமுதயத்திற்க்கு ஏதிராக மட்டுமே, இவர்களால் தமிழர் விடுதலைபடையையோ, அல்லது நக்ஷலைட்களையோ அல்லது இந்தியாவில் இதுபோன்ற அயூதம் தாக்கி போராடும் குழுவினருக்கு எதிராக இந்த முறியடிப்பு சம்வம் காண முடியாது காரணம் அங்கெல்லாம் நமது சமுதாயத்தில் உள்ளது போல் இன்பார்மர்கள் கிடையாது) என்பதும் இது உளவுத்துறையினர் தாங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஜோடிக்கப்படும்' FABRICATED CASED என்று ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள் நடுநிலை கொண்ட நீதி தவறாத எமது மரியாதைக்குரிய காவல் துறையின் கண்ணியவான்கன்.

பொதுவாக காவல்துறையினர் ஒரு குறிப்பிட் வழக்கின் விவரங்களை பத்திரிக்கையாளருக்கு தெரிவிப்பதற்க்கு, செய்தியாளர்கள் சந்திப்பினை ஏற்பாடுசெய்வார்கள், இதற்கென்று வழிகாட்டு நடைமுறைகளை காவல்துறை பின்பற்றி வருகின்றது. அதாவது வழக்கின் தன்மையைப்பொறுத்து அந்த பகுதியின் காவல் துறையின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பார்கள், இந்த சம்வத்தில் அதற்க்கு மாறாக உயர் அதிகாரிகள் அமைதிகாத்துள்ளனர் நுண்கிருமி மட்டுமே பேசியும் கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார் இதிலிருந்த இது ஓர் மிக பெரிய ஜோடிப்பு கேஸ் என்பது விளங்கும். இதே போல் ஹாமித்பக்ரி விஷயத்திலும், சென்னை LIC தகர்க்க நடந்த சதி-கொடுங்கையூர் வழக்கிலும் இதே போல்தான் நடந்தது. இந்த சந்தேகம் நாம் மட்டும் எழுப்பவில்லை ரத்னசபாபதி நடத்திய கூட்டதில் கலந்துகொண்ட பத்திகையாளர்கள் அனைவரும் இந்த சந்ததேகத்தை எழுப்பியுள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.

பத்திரிகையாளர்களின் சந்தேகம்


ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்தில் மக்களிடம் வலம் வரும் இஸ்லாமிய இயக்கங்களின் மீது தீவிரவாத சித்தாந்த்தை எதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்துடன் இணைந்து உளவுத்துறை செய்யும் சதிதான் இது அதற்க்கு நமது சமுதாயத்தினர் துணைபோவது தான் வேதனை. கடந்த காலங்களின் வரலாறும் இது தான் ஏன் தமுமுகவை தடைசெய்வதற்காக மத்திய மாநில அரசுகள் ஆசியுடன் அன்றைய உளவுத்துறையினர் செய்த சதிகளை நினைவு கூறவும்.



அன்புடன்
தென்காசி பட்டனத்தான்

உறுப்பினர்கள்

அலமாரி