« Home | முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து » | முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து » | இயக்கங்களின் தற்போதைய கடமைகள் » | இயக்கங்களின் தற்போதைய கடமைகள் » | மும்பையை மறு குஜராத்தாக்குவதற்கு திட்டமா? » | தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை தமிழ் முஸ்லிம்க... »

யாருடைய தூண்டுதலால் உள்ளே சென்றார்கள்?

கோவை சிறைவாசிகளும் -தமிழ்நாடு தவ்ஹீத் தலைவரும்...

இந்தப் பீஜேயின் ஏமாற்றுப்பேச்சைக்கேட்டு எத்தனை சகோதரர்கள் மாணம்மரியாதையையெல்லாம் இழந்திருக்கின்றார்கள் தெரியுமா?

எத்தனைக் குடும்பம் தெருவில்நிற்கின்றது தெரியுமா?

இன்று குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில்இருக்கின்றார்களே அந்தச் சகோதரர்கள் யாரால் உள்ளே சென்றார்கள்?

யாருடையதூண்டுதலால் உள்ளே சென்றார்கள்?

யாருடைய பேச்சைக் கேட்டு உள்ளேசென்றார்கள்?

இன்று அவர்கள் குடும்பம் பட்டினியாலும் துன்பத்தாலும் வாடிக்கொண்டிருக்கின்றதே அந்தக் குடும்பங்கள் இந்த நிலைக்கு ஆளானதற்கு என்னக்காரணம்?

இந்தப் பீஜேக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று பீ.ஜே-யால் மறுக்கமுடியுமா??

20 ஆண்டுகளுக்கு முன்பு தப்லீக் ஜமாத்தை எதிர்ப்பதற்காக அவர்கள் செய்யாத ஒருவிஷயத்தை கையிலெடுத்தார் இந்த பீஜே. அதில் முக்கியமானது ஜிஹாத் என்றபிரச்சாரம். அதாவது ஜிஹாத் செய்வதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?

ஜிஹாத் செய்வதைவிட்டும் ஏன் மக்களை திசைத்திருப்புகின்றீர்கள்?

என்றெல்லாம் கேள்வி மேல்கேள்வியெழுப்பி அவர்களை எதிர்பதற்காக வேண்டியே அவரின் ஜிஹாத் வேடத்தைஅரங்கேற்றினார். அதோடு தன்னுடன் இருப்பவர்களிடமும் ஜிஹாத் செய்யுங்கள் என்றுதூண்டினார். இவரது சுயநலத்தை அறியாத பல சகோதரர்கள், ஏதோ இவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி, இவர் பேச்சை கேட்டு ஜிஹாத் என்ற பெயரால் செய்த செயலுக்காக இன்று 8 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றார்கள். அந்தச்சகோதரர்கள் உள்ளே தள்ளப்பட்ட பிறகு இவருடைய ஜிஹாத் பிரச்சாரம் சற்று தனியஆரம்பித்தது.


அதன் பிறகு இன்னும் சில சகோதரர்களோ ஜிஹாத் என்ற பெயரால் பையத் எனும் இயக்கத்தில் இணையத் தொடங்கினர். தவ்ஹீத் சகோதரர்கள் பெரும்பாலோர் அந்த இயக்கத்தில் சேரவே தனது செல்வாக்கு குறையும் நிலைஏற்பட்டவுடன் உடனே - அந்த பையத் இயக்கத்தை எதிர்க்கும் வன்னமாக - ஜிஹாத்எதிர்ப்பு பிரச்சாரத்தை துவங்கினார். தப்லீக் ஜமாத்தை எதிர்ப்பதற்காக ஜிஹாத்பிரச்சாரத்தை தூண்டிவிட்டவர் பைஅத் அணியினரை பலவீனப்படுத்துவதற்காக ஜிஹாத்செய்வதே தவறு என்று அந்தர் பல்டி அடித்தார்.

இப்படி இவரின் சுய நலனுக்காகநேரத்திற்கு நேரம் நிறம் மாறுவதை தெரியாத அப்பாவி சகோதரர்கள் பலியாவது தான்பரிதாபம்.சென்ற 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே பீஜேயின் ஜிஹாத் எதிர்ப்புப் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த வேலையில், அவர் அது சம்பந்தமான ஒரு கேள்விக்கு பதில் சொல்லியபோது தான் உன்மையான அவரது சுயரூபத்தைப் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குகிட்டியது.

அதாவது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக 30க்கும் மேற்பட்டஇளைஞர்களை வைத்து 'ரகசிய கேள்வி பதில் நிகழ்ச்சி' நடத்தப்பட்டது. அதில் நானும்கலந்துக்கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் ஒரு சகோதரன் 'நீங்கள் தான் அந்தக்கோவை சகோதரர்களை ஜிகாத் செய்யத் தூண்டினீர்கள்' என்று சொல்கிறார்களே என்றுகேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த பீஜே, 'ஆம்! நான் அன்று அவ்வாறுசொன்னேன் என்பது உன்மைத்தான். ஆனால் நான் அன்று சொன்னதெல்லாம் தவறுஎன்று இந்த 4 மாதங்களாக, நான் தர்ஜுமா எழுதுவதற்காக குர்ஆனை ஆய்வு செய்தபோது தான் எனக்குத் தெரிய வந்தது. காரணம் முன்பெல்லாம் நான் ஒரு வசனத்தைப்படிப்பேன். அதை ஆய்வு செய்யாமல் அப்படியே சொல்லிவிடுவேன். இப்பொழுது தான்ஜிஹாத் பற்றி நாம் முன்பு சென்னது அனைத்தும் தவறு என்று புரிந்தது' எனக் கூறினார்.

அதாவது தான் முன்பு சொன்னெதெல்லாம் ஆய்வு செய்யாமல் தவறாக சொன்னதாகவும்இப்பொழுது தான் இவர் உன்மையிலேயே(?) ஆய்வு செய்ததாகவும் சொல்கிறார் என்றால்என்ன அர்த்தம்?

இவருடைய பேச்சை நம்பி இவர் செய்யும் சத்தியத்தை நம்பி இவரின்இன்றைய கூற்றின் படி மோசம் போன சகோதரர்களின் நிலை என்ன?

அவர்களின்குடும்பம் கதி என்ன?

இப்படி எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் சுயநலத்துக்காக நேரத்துக்குநேரம் மாறி மாறி ஃபத்வா கொடுக்கும் இவர் குடும்பத்தின் இன்றைய வசதி என்ன?

என்பதை சமுதாயம் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு பேச்சுக்காக அவர் தவறாகஃபத்வாக் கொடுத்துவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி தனது தவறானஃபத்வாவை கேட்டு, அதன் படி நடந்ததால் இன்று 8 ஆண்டுகளாக உள்ளேஇருக்கின்றார்களே அவர்களுக்காக இவர், இந்த 8 ஆண்டுகளில் எத்தனை தடவை குரல்கொடுத்திருக்கின்றார்?

எத்தனை தடவை அவர்களுக்காக போராடியிருக்கின்றார்?

அப்படிஇவர் பேச்சைக் கேட்டு ஜாமீனில் வர முடியாத அளவுக்கு 8 ஆண்டுகளாக உள்ளேஇருக்கின்றார்களே அந்தச் சகோதரர்கள். அவர்களுக்காகவும் அவர்களின்குடும்பத்திற்காகவும் இதுவரையில் எந்த உதவிக்காகவாவது போராடியிருப்பாரா?

உடனேசொல்லுவார்கள் இவர் அடிவருடிகள் 'தற்போது ஜெயலலிதாவிடம் போய் பேசினாரேஎன்று' அது ஏமாற்று வேலை. அங்கேயும் தனது காட்டிக்கொடுக்கும் வேலையை அவர்செய்யாமல் இல்லை. அதுமட்டுமல்ல தமுமுக காரன் அந்தப் பிரச்சனையை எடுத்து அவர்களுக்காக போரடுகிறான் என்பதற்காக இவர்கள் இதை கையில்எடுத்திருக்கின்றார்கள் உண்மையில் இவர் இப்படி அவர்கள் வெளியே வருவதில்ஆசைப்பட்டவராக இருந்தால் காவல்துரையினரிடம் அவர்களுக்கு எதிராக சாட்சிசொல்லுவாரா?

இன்னும் சில சகோதரர்களை காட்டிக் கொடுத்தாரே, அது எத்தனைப்பேருக்குத் தெரியும்?

எந்த அளவுக்கு இவர் நடந்துக் கொண்டார் என்பதற்கு சிறு உதாரணத்தை பாருங்கள்.இவர் தமுமுகவில் இருந்த பொழுது ஒரு தமுமுக சகோதரர் அதுவும் ரமநாதபுரத்தில் இஸ்லாமிய அரக்கட்டளையில் பணிபரிந்துக் கொண்டிருந்த ஒரு சகோதரர்இவரிடம் 'ஏன் நீங்கள் மட்டும் இமாம் அலி சுட்டுக்கொள்ளப் பட்ட சம்பவம் பற்றிபத்திரிக்கையில் எழுதவில்லை? எவன் எவனோ எழுதுகிறான்? அத்தனைப் பத்திரிக்கைகாரணும் எழுதினான். ஆனால் நீங்கள் மட்டும் நமது சமுதாயத்திற்காக துவங்கப்பட்டஉணர்வு இதழில் எழுதவில்லையே ஏன்?' என்று கேட்டதற்கு 'அது பற்றி உங்களுக்குசொன்னா புரியாதும்மா' என்று சொல்லி சமாளித்திருக்கின்றார்.

அதோடு பீஜே சும்மாஇருந்திருந்தாலும் பரவாயில்லை. அந்தச் சகோதரன் சிறைவாசி சம்பந்தமாக இவரிடம்கேள்வி எழுப்பியதற்காக அவர் பணிபுரிந்த இஸ்லாமிய அறக்கட்டளைக்கும், அதைநடத்திய வலைகுடா வாழ் சகோதரர்களுக்கும் போன் செய்து 'அந்த ...... சரியில்லை.ஆந்த ஆளோட போக்கு சரியில்லை. அவர வேலைய விட்டு தூக்கிடுங்க'என்றிருக்கின்றார்.உடனே அந்த சகோதர்கள் அண்ணனின் உத்தரவுக்கு இனங்க அனைத்துஇடங்களிலிருந்தும் போன் கால்கள். உடனே அந்த சகோதரருடைய வேலைக் காலி.

ஏன்இந்த புத்தி இவருக்கு? அந்த சிறைவாசி சகோதரர்கள் பற்றி பேசினாலே உடனேபோட்டு கொடுத்து விடுவது தான் இந்த நயவஞ்சகனின் வேலை. இது சிறிய உதாரணம்தான். இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் இருக்கின்றது தெரியுமா?தமுமுக இத்தனை ஆண்டுகாலம் ஏன் சிறைவாசிகளுக்காக குரல் கொடுக்கவில்லைஎன்று சிலர் கேட்கின்றார்கள். உன்மையில் இந்த பீஜே தமுமுகவில் இருந்த பொழுதுஅதன் தலைமையை இந்த தனி நபர் சுயமாக செயல் பட விடாமல் தடுத்தார் என்பதுதான் சத்தியமான உண்மை.

குறிப்பாக சிறைவாசிகள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும்விஷயங்களிலும் சரி, அல்லது மற்ற இஸ்லாமிய சமுதாயம் ஒன்றாக ஒரு முடிவைஎடுக்கும் விஷயத்திலும் சரி. அவை அனைத்திலும் தமுமுக கலந்துக்கொள்ளாமல் தடுத்ததே இந்த பீஜே தான்;. இது போன்ற இன்னும் பல சமுதாய நலப் பணிகள்சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த சமுதாய துரோகி அந்த தமுமுக தலைமையைதடுத்து வருவதை கண்கூடாக கண்டுள்ளோம். அதை சில தலைவர்கள் சொல்லிவருத்தப்பட்டார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் அந்தத் தலைவர்கள் ஒரு பெரியசமுதாய இயக்கம் உடைந்து சிதறி விடக்கூடாது. அதன் மூலம் நமது லட்சியங்கள்பாழ்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பலமுறை இந்த சமுதாய துரோகியுடைய பேச்சைமீறாமல் தலைசாய்தார்கள்.

அவரின் சமுதாய துரோகம் அதிகமாகி உச்சக்கட்டத்தைஅடைந்தது. பீஜே வெளியேறிய பிறகு தான் முஸ்லீம்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் போராடத் துணிந்தார்கள். அதற்கு முன்பெல்லாம் இந்த பீஜே சிறைவாசிகள் பிரச்சனைஉட்பட எந்த காரியத்திலும், குறிப்பாக சமுதயத்திற்கு பயனளிக்கக்கூடிய, ஒட்டு மொத்தசமுதாயமும் ஒன்றாய் இனைந்திருக்கக்கூடிய எந்த தருனத்தையும் இவர் அனுமதிக்கவில்லை. இது நன்றாத் தெரியும். இது தான் உண்மை.

உண்மையிலேயே நமதுசகோதரர்கள் குறிப்பாக தவ்ஹீத் சகோதரர்கள் இவருடைய உண்மை நிலையைத்தெரிந்து அவரை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இவரது இந்த சமுதாய துரோகச்செயலை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. இனிமேலும் இவரது சூன்ய பேச்சில் மயங்கிசமுதாயத்திற்கு நாமும் சேர்ந்து துரோகம் செய்வோமேயானால் நாளை மறுமைநாளில்அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறி எச்சரிக்கின்றோம். அதுமட்டுமல்ல அன்று இவரை நம்பிய பலர் இன்று இவரால் பல துரோகத்துக்கும் பலகொடுமைகளுக்கும், இழி சொற்களுக்கும் ஆளாகியிருக்கின்றார்களே அதே நிலைமைநாளை உங்களுக்கும் வரும் என்ற எச்சரிக்கையுடன் நிறைவு செய்கிறேன்.அல்லாஹ் நன்கறிந்தவன்.

வஸ்ஸலாம்.
அப்துர் ரஹ்மான்,
சென்னை.
இஸ்லாம், முஸ்லிம், லெபனான், சிரியா, பாலஸ்தீன்

உறுப்பினர்கள்

அலமாரி